Sunday, September 20, 2026

Song on Sri Sivan Saar (Poorvashrama Younger Brother of Sri Mahaperiyava who was Jnani) 

உ 

 

இன்று (17-09-2026) ஆவணி அனுஷம். ஶ்ரீ சிவன் சார் மீது ஓர் தமிழ்ப் பாடல் !

 

பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன் 

 

இசை அமைத்துப் பாடியவர் - திருமதி லதா ஶ்ரீதரன் 

 

ராகம் - பேகடா 

தாளம் - ஆதி 

 

பல்லவி 

 

கடைக்கண்ணால் எமை பாருமே

அடைக்கலம் தந்தெமை சாருமே

 

அனுபல்லவி 

 

புண்ணியம் பல கோடி சேருமே

பாதம் பணிந்திட நினதருள் கூருமே

 

( கடைக்கண்ணால் ) 

 

சரணம் 

 

சந்திரசேகரர் திருவடி வணங்கிய அனுஜரே

காமகோடி அண்ணல் வாழ்த்திய உத்தமரே

 

அன்பர் துயர் தீர்க்கும் சிதானந்த ரூபனே

இன்பம் எங்கும் நிறை ப்ரஹ்ம ஸ்வரூபியே

 

( கடைக்கண்ணால் ) 

 

மெல்லிய தேகம் கொண்ட சித்தபுருஷரே

மல்லிகை மணம் கமழும் பொற்பாதமே

 

பஞ்சபூதங்கள் வணங்கும் பரமதயாளனே

தஞ்சம் தந்திடும் உயர் வேதாந்த சாரமே

 

( கடைக்கண்ணால் )


YouTube Link to hear the song! 

https://youtu.be/eJTqMdBTBhE





No comments: