Sunday, August 25, 2024

 


 

ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல் ஆடி அனுஷம் 2024

 

இசை அமைத்துப் பாடியவர் திருமதி சுபாஷிணி ஶ்ரீசைலன்

கீ போர்டு - திரு பிரசன்னா ஶ்ரீசைலன்

பாடல் இயற்றியவர் திரு ஆனந்த் வாசுதேவன் 

அம்ரிதவர்ஷினி ராகம் ஆதி தாளம் 

 

பல்லவி

 

தரிசித்திட வந்தேன் ஐயா

நடமாடும் தெய்வம் காஞ்சி மாமுனியை

 

அனுபல்லவி

 

கோடி சூர்ய ப்ரகாசனை

காமகோடி பீட நிவாசனை

 

( தரிசித்திட வந்தேன் ஐயா )

 

சரணம்

 

தண்டம் ஏந்திய தயாபரனை

காஷாயம் தரிக்கும் கிருபாகரனை

விடை ஏறும் வித்தகனை

பீடு நடை போடும் உத்தமனை

 

( தரிசித்திட வந்தேன் ஐயா )

 

அருள் பொழியும் அம்ருதவர்ஷினியை

இருள் நீக்கிடும் அருட்ஜோதியை

அறம் நல்கிடும் அக்ஷயபாத்திரத்தை

கரம் கொடுக்கும் காமதேனுவை

 

( தரிசித்திட வந்தேன் ஐயா )

 

https://youtu.be/VLfdgaq8OJw

 

 

Saturday, August 24, 2024



அனுஷம் (14-08-2024) ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்


இசை அமைத்துப் பாடியவர் திருமதி மோஹனா கிருஷ்ணன் 

பாடல் இயற்றியவர் திரு ஆனந்த் வாசுதேவன்

நாதநாமக்ரியா ராகம் ஆதி தாளம் 


பல்லவி


மென்மலர்ப் பாதம் கண்டு கொண்டேன்  

என் மனம் நெகிழ வணங்கி நின்றேன் 


அனுபல்லவி


சிந்தனை தோயவே பற்றிக் கொண்டேன் 

வந்தனம் செய்து பணிந்து நின்றேன்

( மென்மலர்ப் பாதம் )

 

சரணம்

கருணை பொழியும் விழிகள் இரண்டு

துணையாய் நமக்கு என்றும் உண்டு

ஆசிகள் நல்கும் கைகள் இரண்டு

சேர்ந்திட நமக்கு க்ஷேமம் உண்டு

( மென்மலர்ப் பாதம் )

 பாபம் போக்கும் பாதம் இரண்டு

தாபம் நீக்கிடும் அறிவாய் நன்று

புன்னகை பூக்கும் முகமது கண்டு

பொன்மலர் சூடி வணங்கிடு நன்று

( மென்மலர்ப் பாதம் )

https://youtu.be/aUQJtAdJ1PU

 

ARAM by Jeyamohan