உ
ஶ்ரீ மஹா பெரியவா மீது
ஓர் தமிழ்ப் பாடல் ஆடி அனுஷம்
2024
இசை அமைத்துப் பாடியவர்
திருமதி சுபாஷிணி ஶ்ரீசைலன்
கீ போர்டு - திரு பிரசன்னா ஶ்ரீசைலன்
பாடல் இயற்றியவர்
திரு ஆனந்த் வாசுதேவன்
அம்ரிதவர்ஷினி ராகம் ஆதி தாளம்
பல்லவி
தரிசித்திட வந்தேன்
ஐயா
நடமாடும் தெய்வம்
காஞ்சி மாமுனியை
அனுபல்லவி
கோடி சூர்ய ப்ரகாசனை
காமகோடி பீட நிவாசனை
( தரிசித்திட வந்தேன்
ஐயா )
சரணம்
தண்டம் ஏந்திய தயாபரனை
காஷாயம் தரிக்கும்
கிருபாகரனை
விடை ஏறும் வித்தகனை
பீடு நடை போடும் உத்தமனை
( தரிசித்திட வந்தேன்
ஐயா )
அருள் பொழியும் அம்ருதவர்ஷினியை
இருள் நீக்கிடும்
அருட்ஜோதியை
அறம் நல்கிடும் அக்ஷயபாத்திரத்தை
கரம் கொடுக்கும் காமதேனுவை
( தரிசித்திட வந்தேன்
ஐயா )
Comments