உ
அனுஷம் (14-08-2024) ஶ்ரீ மஹா பெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
இசை அமைத்துப் பாடியவர் திருமதி மோஹனா கிருஷ்ணன்
பாடல் இயற்றியவர் திரு ஆனந்த் வாசுதேவன்
நாதநாமக்ரியா ராகம் ஆதி தாளம்
பல்லவி
மென்மலர்ப் பாதம் கண்டு கொண்டேன்
என் மனம் நெகிழ வணங்கி நின்றேன்
அனுபல்லவி
சிந்தனை தோயவே பற்றிக் கொண்டேன்
வந்தனம் செய்து பணிந்து நின்றேன்
( மென்மலர்ப் பாதம் )
சரணம்
கருணை பொழியும் விழிகள் இரண்டு
துணையாய் நமக்கு என்றும் உண்டு
ஆசிகள் நல்கும் கைகள் இரண்டு
சேர்ந்திட நமக்கு க்ஷேமம் உண்டு
( மென்மலர்ப் பாதம் )
தாபம் நீக்கிடும் அறிவாய் நன்று
புன்னகை பூக்கும் முகமது கண்டு
பொன்மலர் சூடி வணங்கிடு நன்று
( மென்மலர்ப் பாதம் )
Comments