தந்தை சொல் காத்த தனயனே



Namaskaram


Have composed a song on Lord Rama.  Glad to share this on the auspicious Sri Rama Navami.

The song is set to music by Smt Rukmini Srikrishna on Raga Hindolam.

Kindly hear and share your valuable feedback.






ராகம் – ஹிந்தோளம்



பல்லவி



தந்தை சொல் காத்த தனயனே

எம்மைக் காத்தருள் புரிவாயே – ஸ்ரீ ராம 



அனுபல்லவி



தர்மத்தில் வழுவாது நிலைத்த தலைவனே

கர்மத்தை நழுவாது செய்த தவப்புதல்வனே 



( தந்தை சொல் காத்த தனயனே )



சரணம்



அகலிகைக்கருள் செய்த காருண்ய மூர்த்தியே

குகனை தமையனாய் கொண்ட அண்ணலே

இகபர சுகம் துறந்த கோசலை மைந்தனே

சபரிக்கு முக்தியளித்த சீதா நாயகனே



( தந்தை சொல் காத்த தனயனே )



சரணம்



எண்ணற்ற பக்தர்கள் உனை துதித்தக மகிழ்ந்திட

கண்ணுற்ற அடியார்க்கு அருள் மழை பொழிந்திட 

விண்ணுற்ற தேவரும் நின் புகழ் போற்றிப் பாடிட

பண்ணுற்ற சிறியேனுக்குந்தன் கடைக்கண் காட்டிட



( தந்தை சொல் காத்த தனயனே )





எழுத்து - ஆனந்த் வாசுதேவன்


இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா


பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்




You can also WhatsApp your feedback to 9582218808

Comments